சேமியா பிரியாணி (Vermicelli/ Semiya Biryani)
சேமியா-ல பிரியாணியா என ஆச்சர்யமா? நீங்களும் செய்து சுவைத்து பாருங்க .நிச்சயம் உங்க வீட்டுக்கு விருந்தினர் வந்தா கண்டிப்பா இந்த பிரியாணி இடம் பெறும்.
அரிசி உணவு வேண்டாம் என தவிர்க்க எண்ணுபவர்களுக்கு சேமியா பிரியாணி (Vermicelli/ Semiya Biryani) ஒரு வர பிரசாதம் தான்.செய்வது மிக சுலபம் கூட😋 .
தேவையான பொருட்கள்
சேமியா -1 பாக்கெட் (கடைகளில் double roasted சேமியா கிடைத்தால் அதை உபயோகிக்கவும் )
காரட் -1 கப்
பீன்ஸ் -1 கப்
பட்டாணி -1 கப்
உருளை கிழங்கு -1
cauliflower -1 கப் (தேவை பட்டால் )
பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -5
தக்காளி -3
தயிர் -1 கப்
மிளகாய் பொடி-2 ஸ்பூன்
தனியா பொடி -2 ஸ்பூன்
மஞ்சள் பொடி -ஒரு சிட்டிகை
பட்டை -2
கிராம்பு -2
ஏலக்காய் -2
பிரியாணி இலை-1
ஷாஜீரா ( shah jeera ) -1 டீஸ்பூன் (department store இல் கிடைக்கும்.இல்லை எனில் சோம்பு உபயோக படுத்தலாம் )
எண்ணெய்-4 ஸ்பூன்
நெய் -2 ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு -தேவையான அளவு
செய்முறை
முதலில் காய்கறிகளை சிறியதாக நறுக்கி அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 1 கப் தயிர் ,மிளகாய் தூள் 1 ஸ்பூன் ,மல்லி தூள் 1 ஸ்பூன் ,கரம் மசாலா 1 ஸ்பூன் , உப்பு சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் இவற்றை போட்டு நன்றாக பிசைந்து ஒரு அரை மணி நேரம் ஊற விடவும் .
ஒரு அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் .பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி ,அதில் சேமியாவை போட்டு , ஒரு சிட்டிகை உப்பு ,சிறிது ஷாஜீரா அல்லது சோம்பு இவற்றையும் போட்டு (சேமியா கொதி நீரில் மூழ்கி இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.)1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சேமியாவை 10 நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும் .
10 நிமிடங்கள் கழித்து சேமியாவை வடிகட்டி ஆற விடவும் .
ஒரு அகலமான மற்றும் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஷாஜீரா (சோம்பு ) இவற்றை போட்டு பொரிந்ததும், அதில் நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். நன்கு வதங்கிய வெங்காயத்துடன் ,இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன், முழு பச்சை மிளகாய் 5 இவற்றை போட்டு வதக்கவும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்.
இந்த விழுது நன்கு வதங்கியதும் அதனுடன் ,நறுக்கிய தக்காளி மற்றும் ஊற வைத்த காய்கறி கலவையை போட்டு நன்கு வதக்கி ,அடுப்பை sim இல் வைத்து மூடி போட்டு நன்கு வேக விடவும். ( தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை )
நன்கு வெந்ததும் ,சிறிது கரம் மசாலா ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடி ,உப்பு இவற்றை சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையுடன் ,நன்கு வெந்து ,வடித்து வைத்துள்ள சேமியாவை போட்டு ,அதன் மேல் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ,பொடியாக நறுக்கிய புதினா ,கொத்தமல்லி இலை தூவி (தேவையெனில் அரைமூடி எழுமிச்சம் பழம் பிழிந்து ) 10 நிமிடம் தம் இல் வைத்து இறக்கவும்.
இப்போது சுவைக்க தயாராக சேமியா பிரியாணி (Vermicelli/ Semiya Biryani) !!!
குறிப்பு
நன்கு கொதித்த நீரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சேமியாவை மூழ்க வைத்து வேக விடும் போது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
ஷாஜீரா என்பது ஹைதராபாத் பிரியாணி போன்ற நிஜாம் சமையல் வகைகளில் அதிகம் பயன் படுத்த கூடியது