வாழைப்பூ வடை (vaazhai poo vadai / banana flower fritters)


வாழைப்பூ வடை ,vaazhai poo vadai , banana flower fritters

வாழைப்பூ வடை 

(vaazhai poo vadai / banana flower fritters)

இந்த வாழைப்பூ வடை (vaazhai poo vadai / banana flower fritters) மிகவும் சுவை மிகுந்தது. பாரம்பரிய உணவும் கூட . மருத்துவ குணம் நிறைந்தது 

தேவையான பொருட்கள் 


வாழை பூ சிறியது -1
கடலை பருப்பு -1 கப்
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி -சிறிய துண்டு
பச்சை மிளகாய் -காரத்திற்கு ஏற்ப
கருவேப்பிலை -சிறிது
மல்லிதழை -சிறிது
சோம்பு -( தேவைபட்டால் )-1 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு ஏற்ப
எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை 

வாழை பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
கடலை பருப்பை கழுவி 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
இஞ்சி ,சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,மல்லி தழை இவற்றை கழுவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

கடலை பருப்பை சிறிது உப்பு ,மற்றும் சோம்பு சேர்த்து மிக்ஸ்யில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் .(தண்ணீர் சேர்க்க கூடாது )
விருப்ப பட்டவர்கள் வாழை பூவையும் அதனுடன் சேர்த்து அரைத்து கொள்ளலாம் .இல்லையெனில் பொடியாக அரிந்து கொள்ளலாம்.

நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மல்லிதழை இவற்றை அரைத்த கடலை பருப்பு மற்றும் வாழை பூவுடன் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

வாழைப்பூ சுத்தம் செய்யும் முறை 


வாழை பூவின் சிவப்பு நிற மடல்களை நீக்கி விட்டு உள்ள இருக்கும் பூக்களை எடுத்து கொள்ள வேண்டும் .அந்த பூக்களில் உள்ள கேசரங்களையும் (stamens) அதோடு சேர்ந்த தோல் போன்ற பகுதியையும் நீக்கி விட்டு பூக்களை மட்டும் சமையலுக்கு பயன் படுத்தவும்.

வாழை பூவின் பயன்கள்


இரும்பு சத்து (RichFiber Content) நிறைந்தது.
வயறு சம்பந்தமான தொல்லைகள் தீரும்.
Previous
Next Post »