சுலபமான பூண்டு சாதம் (Easy Garlic Rice)
வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி .இல்லையெனில் வெறும் சாதம் மட்டுமே இருக்கும் வேளையில் விருந்தினர் வந்தாலும் சரி ,அல்லது Bachelor அனைவரும் சுலபமான பூண்டு சாதம் (Easy Garlic Rice) நொடியில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
சாதம் -1 கப்
பூண்டு பற்கள் -6 முதல் 8
மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு -சுவைகேர்ப்ப
கருவேப்பிலை-சிறிது
கடுகு -சிறிது.
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வட்டமாக நறுக்கிய பூண்டு பற்களை போட்டு வதக்கவும்.
அதில் சிறிது மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து சிறிது ( 3 ஸ்பூன் அளவு )தண்ணீர் சேர்த்து கருவேப்பிலை போட்டு அதில் சாதம் கலந்து ,பரிமாறவும்.
பூண்டு பலன்கள்
1. Antibacterial and Antiviral
2. இதயத்திற்கு பாதுகாப்பு.
3.கொலஸ்ட்ரோல் குறைக்கிறது.
முக்கியமாக,
4.கான்சர் குறைக்கிறது