கருவேப்பிலை துவையல் (curry leaf chuney)
மிகவும் எளிதான, அதே சமயம் மிக அதிக சத்துக்கள் நிறைந்தது கருவேப்பிலை. ஆனால் நாம் அதை உணவு உண்ணும் போது ஒதுக்கி விடுகிறோம்.கறிவேப்பிலைக்கு கறிவேம்பு என்ற பெயர் உண்டு கருவேப்பிலை இரும்பு சத்து நிறைந்தது. கூந்தல் வளர்ச்சிக்கு மிக உகந்தது.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை - 2 அல்லது 3 கப்பெருங்காயம் -1/4 ஸ்பூன்
வர மிளகாய் -2
பச்சை மிளகாய் -2
குறுமிளகு (மிளகு ) - 4 அல்லது 5
இஞ்சி -1 சிறிய துண்டு
கடலை பருப்பு -1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
புளி-நெல்லிக்காய் அளவு
எண்ணெய் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் பெருங்காய தூள் போட்டு பொரிய விடவும்.
பின்பு காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.
அதனுடன் மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி, கழுவி ஈரம் இல்லாது சுத்தம் செய்ய பட்ட, காம்பு நீக்க பட்ட கருவேப்பிலை இலைகளை போட்டு வதக்கவும்.
அடுப்பை அணைத்து இந்த கலவையை ஆற விடவும் . மிக்ஸ்யில் தேங்காய் துருவல் மற்றும் புளி சேர்த்து அதனுடன் ஆற வாய்த்த இந்த கலவையை போட்டு உப்பு சேர்த்து ,தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். (மைய அரைக்க வேண்டும் . தேங்காய் துருவல் ,புளி இவற்றை வதக்க தேவை இல்லை )