செம்பருத்தி ஜூஸ் (Hibiscus Juice)
பலன்கள்
வைட்டமின் C நிறைந்தது
இரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது .
ஒரு சிறந்த anti -oxidant ஆகவும் பயன் படுகிறது.
இதன் முக்கிய பயன்களில் ஒன்று, செம்பருத்தி இதயத்திற்கு பலம் சேர்க்க கூடியது
தேவையான பொருட்கள்
தண்ணீர் -1 லிட்டர்.
5 இதழ் செம்பருத்தி பூ -8.
எலுமிச்சம் பழம்-1/2 மூடி.
சர்க்கரை -தேவையான அளவு.
செய்முறை
முதலில் 1 லிட்டர் நீரை நன்றாக கொதிக்க வைத்து அதில், செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து பார்த்தால்,அந்த நீர் ஊதா நிறமாக மாறி இருக்கும்.
(எலுமிச்சம் பழம் பிழிவதற்கு முன் /பின்)
அந்த நீரை வடிகட்டி ,அதில் அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.
இப்போது அந்த நீர் செம்பருத்தி பூவின் நிறமாக மாறுவதை காணலாம்.
அதில் சுவைக்கு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
செம்பருத்தி பூ ஜூஸ் எப்படி செய்வது என்பதை கீழ் காணும் வீடியோ லிங்க் இல் காணலாம்.👇