கொள்ளு பொடி (Kollu podi / Horsegram Powder)


கொள்ளு பொடி ,Kollu podi , Horsegram Powder

கொள்ளு பொடி (Kollu podi / Horsegram Powder)


"கொழுத்தவனுக்கு கொள்ளு!!! இளைத்தவனுக்கு எள்ளு!!!" என்பது நம் முன்னோர்களால் சொல்ல பட்ட முது மொழி.
இதை என் அம்மா ஒரு 80 வயது பெரியவரிடம் இருந்து கற்று கொண்டார்களாம் .

வாரம் ஒரு முறையேனும் கொள்ளு நம் உணவில் சேர்த்து கொள்ள வேணும் . இருக்கின்ற பரபரப்பு வாழ்வில் இது எல்லாம் சாப்பிட எங்க நேரம் இருக்குது என்ற யோசனையா ??? 
இருக்கவே இருக்கு கொள்ளு பொடி ( kollu podi / Horsegram Powder ). நேரம் கிடைக்கும் போது சுலபமாக தயார் செய்து வைத்து கொண்டு , இட்லி பொடிக்கு பதிலாக இதை பயன் படுத்தலாமே.

தேவையான பொருட்கள்

கொள்ளு -1 கப்.
வர மிளகாய் -5
சீரகம் -2 tea spoon
பூண்டு பல்லு -4
கருவேப்பில்லை -1 கொத்து
கல் உப்பு -ருசிக்கு ஏற்ப
எண்ணெய்- 1 tea spoon

செய்முறை 


ஒரு கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தனியே சீரகத்தை போட்டு வறுத்து எடுக்கவும். பின்பு பூண்டு பற்களை போட்டு வறுத்து எடுக்கவும் .பின்பு வர மிளகாயை போட்டு அது நன்கு உப்பி வரும் வரை வறுத்து அதிலேயே கொள்ளு சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.
நன்றாக வாசனை வரும் சமயம் கருவேப்பில்லை சேர்க்கலாம்.
பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் தனியே வறுத்த கல் உப்பையும் சேர்த்து அரைக்கவும்.

தினமும் இட்லி ,தோசை உடன் சேர்த்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் சாதத்துடன்  கொள்ளு பொடி (Kollu podi / Horsegram Powder) சேர்த்தும் உண்ணலாம்.


குறிப்பு 

கொள்ளு நம் உணவில் சேர்த்து வர தேவை இல்லாத கொழுப்பு நம் உடம்பில் இருந்து கரையும் .
கொள்ளு மிகவும் உஷ்ணமான பொருள் .அளவோடு உணவில் சேர்ப்பது நலம் .
Previous
Next Post »