உருளை கிழங்கு வறுவல் ( Easy Potato Fry)


Easy Potato Fry, urulai kizhangu vauval, kizhangu varuval

உருளை கிழங்கு வறுவல் ( Easy Potato Fry)

இது ஒரு சுலபமான ,அனைவரும் விரும்ப கூடிய side dish ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .Bachelors இந்த உருளை கிழங்கு வறுவல் ( Easy Potato Fry) Try பண்ணி பாருங்க !!!10 நிமிடத்தில் தயார் செய்யலாம் !!!


தேவையான பொருட்கள் 

உருளை கிழங்கு பெரியது -1
உப்பு ,மிளகாய் தூள் -சிறிது (சுவைக்கு ஏற்ப )
அல்லது
சில்லி சிக்கன் பவுடர் -சிறிது (சுவைக்கு ஏற்ப )
எண்ணெய் -1 டீஸ்பூன்.

படத்தில் காட்ட பட்டுள்ளது போலஉருளை கிழங்கை நன்றாக கழுவி, தோல் நீக்கி அல்லது நீக்காமல் வட்டம் வட்டமாக வெட்டி  அதில்
 சிறிது உப்பு ,சிறிது மிளகாய் தூள் ,சிட்டிகை மஞ்சள் தூள் (விருப்பம் என்றால் ) போட்டு பிரட்டி கொள்ளவும்.
மிளகாய் தூள் , உப்பு, மஞ்சள் போட்டு பிரட்டிய உடனே தோசை கல்லில் இடவும் .அதிக நேரம் ஊற வைக்க கூடாது. நீர் விடும் தன்மை வாய்ந்தது.

தோசை கல்லை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கிழங்கை போட்டு ஒரு பாகம் வெந்ததும் திருப்பி விடவும்.
வெந்ததும் ஒரு தட்டில் வைத்து லேசாக மிளகு தூள் தூவி பரிமாறவும். சுவை பிரமாதமாக இருக்கும்.

5 நிமிடத்தில் சுவையான உருளை கிழங்கு fry ரெடி !!!

குறிப்பு 

உப்பு மிளகாய் தூள் இல்லாமல் சில்லி சிக்கன் பவுடர் சேர்த்து பிரட்டி வறுத்தாலும் கூடுதல் சுவையுடன் இருக்கும் 

இதையே,Grill plate -இல் போட்டு எடுத்தால் அது தாங்க Home Made Barbecued potatoes 😉
Previous
Next Post »