பூண்டு சேர்த்த தக்காளி புலாவ் (Garlic Tomato Pulav)


பூண்டு சேர்த்த தக்காளி புலாவ் ( Garlic Tomato Pulav)
பூண்டு சேர்த்த தக்காளி புலாவ் (Garlic Tomato Pulav)



பூண்டு சேர்த்த தக்காளி புலாவ் 
Garlic Tomato Pulav



இந்த பூண்டு சேர்த்த தக்காளி புலாவ் (Garlic Tomato Pulav) உணவு மராத்திய  வகையை சார்ந்தது .மிக வித்தியாசமான சுவையுடன் கூடியது .இதில் சிறிது தென் இந்திய சமையல் touch சேர்த்து உங்களுக்காக எளிதாக செய்யும் வகையில் குறிப்பு தர பட்டுள்ளது .இதன் ருசி ரசிக்கும் வகையில் இருக்கும் !!!!
bachelors இந்த பூண்டு சேர்த்த தக்காளி புலாவ் (Garlic Tomato Pulav) உணவை எளிதாக சமைத்து ,சுவையாக சாப்பிடலாம் .

தேவையான பொருட்கள் :

அரிசி -2 கப்
(உங்களுக்கு எந்த அரிசி பிடித்தமோ ,அதை கொண்டு செய்யலாம் )
நன்கு பழுத்த தக்காளி -1/2 kg
பூண்டு -25 பற்கள்
இஞ்சி .பூண்டு விழுது -2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
கருவேப்பிலை -சிறிது(தேவைபட்டால் )
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
சீரக தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

செய்முறை :


பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும் .
cooker -இல் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் .அதில் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை போட்டு நன்கு வதக்கவும் .
அதில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்கவும் .

மிக்ஸ்யில் சிறிது இஞ்சி ,பூண்டு ,பெரிய வெங்காயம் ,சிறிது கருவேப்பிலை இவற்றை போட்டு நன்கு அரைத்து,அந்த விழுதை பூண்டுடன் போட்டு ,பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .

அதில் சீரக தூள் ,மிளகாய் தூள் ,கரம் மசாலா தூள் உப்பு இவற்றை சேர்த்து வதக்கவும் .

தக்காளி பழங்களை நன்கு கழுவி மிக்ஸ்யில் போட்டு நன்றாக அரைத்து அந்த விழுதையும்,வெங்காய விழுதுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் .

அதனுடன் ,கழுவி வைத்துள்ள அரிசியை போட்டு 1:2 விகிதத்தில் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 விசில் வைத்து இறக்கவும் .

கருவேப்பிலை தேவை பட்டால் சேர்க்கலாம் .இல்லை என்றாலும் பரவாயில்லை. 
Oldest