சுவரொட்டி வறுவல் / lamb spleen fry /suvarotti varuval

 சுவரொட்டி வறுவல் / lamb spleen fry 


சுவரொட்டி வறுவல், மண்ணீரல், lamb spleen fry, suvarotti varuval , ensamayalarayil , to increase hb blood count
சுவரொட்டி வறுவல் / lamb spleen fry 

மண்ணீரல் /சுவரொட்டி (Lamb Spleen ):

-------------------------------------------------------------------------
மண்ணீரல் இதை வழக்கு தமிழ் மொழியில் "சுவரொட்டி" என்று அழைப்பர். சுவரில் எடுத்து அடிக்கும் பொழுது சுவற்றில் அப்படியே ஒட்டி கொள்வதால் இதற்கு அந்த பெயர். ( அதுக்காக இப்போ இருக்கற டைல்ஸ் ல எடுத்து அடிச்சு பார்க்காதீங்க.அவர்கள் சொன்னது முந்தைய  கால  சுண்ணாம்பு பூசிய சுவர்😛 )


தேவையான பொருட்கள் :

---------------------------------------------------

சுவரொட்டி / மண்ணீரல் - 1 
சின்ன வெங்காயம் -10 
(சின்ன வெங்காயம் இல்லை எனில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று)
இஞ்சி - 1/2 இன்ச் 
பூண்டு பற்கள் - 5 or 6 
கரம் மசாலா தூள் - ஸ்பூன் ( கரம் மசாலா தூள் இல்லை எனில் 2 கிராம்பு , ஒரு சிறு துண்டு பட்டை தட்டி எண்ணையில் சேர்க்கவும் )
மிளகு தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - சிட்டிகை 
எண்ணெய் - 1 ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
மல்லித்தழை - சிறிது ( தேவை பட்டால்) 

செய்முறை :

-----------------------

ஒரு சுவரொட்டியை நன்கு கழுவி நடுவில் இருபுறமும் கீறியோ, அல்லது கூரிய கத்தியால் 4 துண்டுகளாக செய்தோ வைத்து கொள்ளவும். ( மிக சிறிய துண்டுகள் செய்யும் போது அதில் உள்ள இரத்த சத்துகள் வீணாவதால் பெரிய துண்டுகளாக செய்து கொள்வது நலம். 

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய சிறிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

அதில் நறுக்கி வைத்துள்ள சுவரொட்டியை சேர்த்து நன்கு பிரட்டி , தேவையான அளவு உப்பு , சிட்டிகை மஞ்சள் தூள் , கரம் மசாலா தூள் 1 /2  ஸ்பூன் சேர்த்து பிரட்டி சுவரொட்டி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் சிம் இல் வைக்கவும் .

தண்ணீர் நன்கு வற்றி சுவரொட்டி வெந்து, எண்ணெய் பிரிந்து, சுருண்டு வரும் வேளையில் மிளகு தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு பிரட்டி அடுப்பில் இருந்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறலாம். 

செய்வதும் சுலபம் . பலனும் அதிகம் .

குறிப்பு :

--------------


மிளகு தூள் சேர்த்த பின்பு வெகு நேரம் அடுப்பில் வைக்க கூடாது.


பயன்கள் : 

---------------------
    இரத்த விருத்தி வேணும் என்பவர்களுக்கு சுவரொட்டி ஒரு அருமருந்து . மகப்பேறு பெண்களுக்கும் , மாதவிடாய் கோளாறு உள்ள பெண்களுக்கும் இதை கிராமப்புறங்களில் சமைத்து கொடுப்பார்கள் . உடனடி இரத்த விருத்தி வேண்டும் என்னும் அசைவ உணவு பிரியர்கள்   இதை சமைத்து உண்ணலாம் . very much useful to increase HB count in blood.
******

மீன் கட்லெட் செய்வது எப்படி என அறிய , 



Previous
Next Post »