கசப்பில்லாமல் பாவக்காய் குழம்பு செய்வது எப்படி? / paavakaai kuzhambu / bitter gourd gravy

 பாகற்காய் குழம்பு 

பாகற்காய் என்றாலே கசப்பு தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த குழம்பு என்றால், எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. அம்மா sepcial . மற்ற குழம்பு வகைகளில் கை பக்குவத்தின் வித்தியாசம் தெரிந்தாலும், இந்த குழம்பின் கை பக்குவம் மட்டும் அம்மாவிடம் இருந்து அப்படியே ஒட்டி கொண்டு விட்டது !!! . நீங்களும் சமைத்து பாருங்கள். உங்களுக்கும் இந்த குழம்பு நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

கசப்பில்லாமல் பாவக்காய் குழம்பு செய்வது எப்படி?, பாவக்காய் குழம்பு , pavakaai kuzhambu, பாகற்காய் குழம்பு

பாகற்காய் குழம்பு




தேவையான பொருட்கள் :

பாகற்காய் -2 அல்லது 3
சின்ன வெங்காயம் -20
பூண்டு பற்கள் -10
இஞ்சி -1 துண்டு
தக்காளி பழம் -3
புளி-ஒரு எழுமிச்சம் பழம் அளவு
தேங்காய் துருவல் -1/2 மூடி
வெந்தையம் -1 & 1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் -2 அல்லது 3 ஸ்பூன்
மல்லி தூள் -2 அல்லது 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 சிட்டிகை
கருவேப்பில்லை -சிறிது
நல்லெண்ணெய் -4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு 

செய்முறை :

ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,கடுகை போட்டு தாளித்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம் இவற்றை போட்டு பொறிய விடவும்.
பொன்னிறமாக பொறிந்ததும் , அதில் பாகற்காயை நன்றாக கழுவி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு ,சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை போட்டு நன்றாக வதக்கவும் .
அடுப்பை சிம் -இல் வைத்து குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வதக்க வேண்டும் .தேவையெனில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளலாம் .
பாகற்காய் நிறம் சிறிது மாறி இளம் பச்சையாகி வேகும் வரை வதக்க வேண்டும் .
பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் 4 பூண்டு பற்களை போட்டு மீண்டும் வதக்கவும் .
வெங்காயம் நன்றாக வதக்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை போட்டு நன்றாக வதக்கி அதில் மஞ்சள் தூள் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் இவற்றை போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும் .
இந்த கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் .

அப்போது ,கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி ஒரு 5 நிமிடம் இந்த கலவையை கொதிக்க விட வேண்டும் .

நன்கு கொதித்ததும் ,அதில் தேங்காய் ,மீதி உள்ள பூண்டு பற்கள் ,ஒரு துண்டு இஞ்சி இவற்றை போட்டு அரைத்து அந்த மசாலாவை ,கொதிக்கும் பாகற்காய் கலவையில் ஊற்றி பச்சை வாசனை நீங்கும் வரை மீண்டும் கொதிக்க விட்டு ,கருவேப்பில்லை தூவி இறக்கவும் .

இப்போது பாகற்காய் குழம்பு ரெடி .

குறிப்பு :


20 நிமிடங்கள் வதக்குவதினால் நிச்சயம் கசப்பு இருக்காது .



Previous
Next Post »