ப்ரோக்கோலி மிளகு ஃப்ரை / Broccoli Pepper Fry / ப்ரோக்கோலி மிளகு வறுவல்

ப்ரோக்கோலி மிளகு  ஃப்ரை / Broccoli Pepper Fry / 

ப்ரோக்கோலி மிளகு வறுவல் 

இது மிக மிக சுலபமாக செய்ய கூடியது மட்டுமில்லாமல் ப்ரோக்கோலி உடலுக்கு நல்ல பலன்களை தர கூடிய காய்கறி ஆகும். 



ப்ரோக்கோலி மிளகு  ஃப்ரை / Broccoli Pepper Fry / ப்ரோக்கோலி மிளகு வறுவல்
ப்ரோக்கோலி மிளகு  ஃப்ரை 



தேவையான பொருள்கள் :

ப்ரோக்கோலி - 1 

இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன் 

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் 

உப்பு 

மிளகு தூள் 


செய்முறை : 

ப்ரோக்கோலியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு கலந்த சுடுநீரில் போட்டு சிறிது நேரம் வைக்கவும். ( இப்படி செய்வதன் மூலம் அதில் சிறு சிறு புழுக்கள் இறந்து விடும் )

மீண்டும் கழுவி எடுத்து வைக்கவும் 

ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் , அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் . பச்சை வாசனை நீங்கியதும் கழுவி வைத்துள்ள ப்ரோக்கோலி துண்டுகளை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து,  சிறிது  தண்ணீர் தெளித்து மூடி இட்டு 10  நிமிடம் அடுப்பை sim -இல் வைக்கவும்.

முக்கால் பதம் வெந்தததும் , மூடியை திறந்து தண்ணீர் வற்றிய நிலையில் மிளகு தூள் தூவி பிரட்டி இறக்கி பரிமாறலாம் .


Starters அல்லது Evening Snacks போலவும் உண்ணலாம் . சுவை மிகுந்தது


குறிப்பு :

மிளகு தூள் தூவி வெகு நேரம் அடுப்பில் வைக்க கூடாது. 

தேங்காய் எண்ணெய் தனி சுவை குடுக்க கூடியது. தேங்காய் எண்ணெய் இல்லை எனில் வேறு எண்ணையும் உபயோகப்படுத்தலாம்.


பலன்கள்:

--------------------


(i) எலும்புகளை வலுவாக்கும்


(ii) புற்று நோய் செல்களை எதிர்க்கும் சக்தி கொண்டது 


(iii) நிறைய antioxidants  கொண்டது 


(iv) கொலஸ்ட்ராலை குறைக்கிறது


(v) சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. 




Newest
Previous
Next Post »