வாழைக்காய் வறுவல் (vaazhakaai varuval /Raw Banana Fry)


வாழைக்காய் வறுவல் ,vaazhakaai varuval /Raw Banana Fry

வாழைக்காய் வறுவல் 

(vaazhakaai varuval /Raw Banana Fry) 


மிக குறைந்த நேரத்தில் செய்ய கூடிய சுவையான வாழைக்காய் வறுவல் (vaazhakaai varuval /Raw Banana Fry). சாம்பார், ரசம் என அனைத்திற்கும் ஏற்ற துணை பதார்த்தம்.


தேவையான பொருட்கள் 


வாழைக்காய் -1
பூண்டு -8-10 பற்கள்
மிளகாய் தூள் -காரத்திற்கு ஏற்ப
மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
கருவேப்பில்லை (தேவை பட்டால்)

செய்முறை 

வாழைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக, சிறிது தடிமனாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பூண்டு பற்களை தோல் நீக்கி தட்டி வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகு போட்டு நன்கு பொரிய விட்டு பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை போட்டு நன்கு வதக்கவும் .பச்சை வாசனை போன பின்பு, அதில் சிறிது மிளகாய் தூள்,மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து உடன் வாழைக்காயை போட்டு அடுப்பை சிம் -இல் வைத்து வாழைக்காயை நன்றாக வதக்கவும்.
கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க கூடாது. தேவை பட்டால் தண்ணீர் தெளித்து விடலாம்.

Sim -இல் வைத்து நன்கு வேகும் வரை ஒரு 10 முதல் 15 நிமிடம் வதக்கவும். மசாலா வில் பிரட்டபட்ட வாழைக்காய் நன்கு வெந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும் பதம் வரை நன்கு வதக்கி, தேவைபட்டால் கருவேப்பில்லை இலைகளை தூவி இறக்கலாம்.

குறிப்பு 

வாழைக்காய் ,வாழைப்பூ போன்றவற்றை இரும்பு வாணலியில் சமைக்க கூடாது .அவை கறுத்து விடும்

.அலுமினியம் அல்லது non -stick பாத்திரங்களில் சமைக்கலாம்.
வாழைக்காயை வெட்டியதும் குளிர்ந்த நீரில் போட்டு விட வேண்டும் .இல்லை என்றாலும் கறுத்து விடும்.

5 நிமிடம் வதக்கினாலே வாழைக்காய் வெந்து விடும் .அதனால் நீர் சேர்க்க அவசியம் இல்லை.

இதே முறையில் உருளை கிழக்கை வேக வைத்து மசித்தும் செய்யலாம் .

இந்த வறுவலில் பூண்டை தட்டி போட்டு செய்வதே அதிக சுவை தரும், பூண்டு பேஸ்ட் ,அல்லது பூண்டை அரைத்து போடுவதினால் சுவையில் மாற்றம் தரும்
Previous
Next Post »