முட்டை மிளகு வறுவல் (pepper egg fry)


முட்டை மிளகு வறுவல் ,pepper egg fry, Egg fry

முட்டை மிளகு வறுவல் (pepper egg fry)


இந்த முட்டை மிளகு வறுவல் (pepper egg fry) வறுவல் எங்க அம்மா ஸ்பெஷல் . இது எங்க வீட்டு அனைவரின் favourite. அம்மா கிட்ட கேட்டா அவங்க இளம் வயதில் இருக்கும் போது அவங்க பக்கத்துக்கு வீட்டு பாட்டி கிட்ட இருந்து கத்துக்கிட்டதா சொல்லுவாங்க. so எப்படி பாத்தாலும் இது ஒரு அரை நூற்றாண்டு சமையல் தானே? அந்த காலத்தில் நாட்டுக்கோழி முட்டை பயன் படுத்த பட்டு இருக்கும்.😋😉

கையில் பிழிஞ்சு எடுத்த தக்காளி சாறு தான் இதுக்கு கூடுதல் சுவையை குடுக்குது . மிக்ஸியில் அரைப்பது இதன் சுவையில் இருந்து மாறுபடுகிறது

அதிலும் கொஞ்சம் fresh மிளகு, பெரும்சீரகம் அரைத்து போட்டா, அப்புறம் சொல்லவே வேணாம். அந்த மணம் (aroma ) அவ்ளோ நல்லா இருக்கும். Try பண்ணுங்க . நம் பாரம்பரிய சுவையை அனுபவிங்க 😊
இனிய தகவலுடன் என் சமையல் அறை (y)

தேவையான பொருட்கள் 


வேகவைத்த முட்டை -3
மிளகு தூள் - 1 ஸ்பூன்
பெரும் சீரக தூள் - 1 ஸ்பூன்
பிழிந்து எடுத்த தக்காளி சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை 


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகு தூள், பெரும் சீரக தூள் இவற்றை சேர்க்கவும் .
அதனுடன் பிழிந்து வைத்த தக்காளி , உப்பு இவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும் .
அதில் வேகவைத்து லேசாக கீறிய முட்டைகளை போட்டு நன்கு பிரட்டி எடுக்கவும் .
முட்டை வறுவல் தயார் .

முட்டை மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை கீழ் காணும் வீடியோ லிங்க் இல் காணலாம்👇.



Previous
Next Post »

1 comments:

Click here for comments
sachu
admin
4 November 2020 at 08:42 ×

very nice recipe

Thank you So Much sachu
Reply
avatar