மீன் கட்லெட் Fish Cutlet
ரொம்ப ஈஸியா மீன் கட்லெட்( Fish Cutlet) ஐ தயார் செய்யலாம் .கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும் .
தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் -2
உருளை கிழங்கு -2
பச்சை பட்டாணி -1 கைப்பிடி (தேவைபட்டால் )
இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
முட்டை -1
பாம்பே ரவை -1 கப்
மல்லிதழை -சிறிது
கரம்மசாலா தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -காரத்திற்கு ஏற்ப
உப்பு -சுவைக்கேற்ப
செய்முறை :
மீன் துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து ,வெறும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
(ஆவியில் வைத்தும் வேக விடலாம் .அல்லது ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி வேக வைத்தும் எடுக்கலாம் .வெந்த மீன்களின் முட்களை நீக்கி விட்டு தனியே எடுத்து வைக்கவும் )
உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து வைத்து கொள்ளவும்.
முட்டையை உடைத்து ,அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ,காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும் .வெங்காயம் வதக்கியதும் ,
அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
அதில் மஞ்சள் தூள் ,கரம் மசாலா தூள் ,மிளகாய் தூள் ,உப்பு இவற்றை சேர்த்து வதக்கி அதனுடன் பச்சை பட்டாணி ,மசித்த உருளை கிழங்கு இவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
அதனுடன் இறுதியாக ,வேக வைத்து முட்கள் நீக்கிய மீன் துண்டுகளை சேர்த்து ,மல்லிதழை தூவி கிளறி இறக்கி வைக்கவும் .
அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ,வட்ட வடிவமாக தட்டி அதை முட்டை கலவையில் தோய்த்து ,ரவையில் போட்டு பிரட்டி ,வாணலியில் எண்ணெய் ஊற்றி ,பொரித்து எடுக்கவும்.
பொதுவாக bread crumbs இல் செய்யும் கட்லெட் விட ரவையில் பிரட்டி செய்யும் மீன் கட்லெட்( Fish Cutlet) கட்லெட் சிறிது வித்தியாசமான சுவையுடன் இருக்கும் .வீட்டில் செய்து பாருங்க.