சுலபமான உருளை கிழங்கு வறுவல் Easy Potato Fry
நேரம் குறைவு ,இல்லை எனில் சமைக்க சோம்பல் ,அதுவும் இல்லையெனில் bachelor சமையல் ,அதிரடி சமையல் என எதில் வேண்டுமானாலும் இந்த சுலபமான உருளை கிழங்கு வறுவல் (Easy Potato Fry) சேர்த்து கொள்ளலாம் . அவ்வளவு சுலபமான உருளை கிழங்கு வறுவல் இது சுவையும் அதிகம் .
தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு : 3
மிளகாய் தூள் : 1/2 டீஸ்பூன்
சீரக தூள் : 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் :1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்
எண்ணெய் : 1/2 டீஸ்பூன்
கடுகு : 1/4 டீஸ்பூன்
உப்பு : சுவைக்கேற்ப
செய்முறை :
உருளை கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கி விரல் அளவு நீள ,நீளமாக நறுக்கி கொள்ளவும் .
( நறுக்கிய உருளை கிழங்கை நீரில் போட்டு வைப்பதன் மூலம் நிறம் மாறாமல் இருக்கும் )
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு பொரிய விடவும் .அதில் நறுக்கிய உருளை கிழங்கை போட்டு ,மேலே கூறிய அனைத்து மசாலா பொருட்களையும்
போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரண்டியால் ஒரு முறை நன்கு கிளறி விட்டு ,ஒரு மூடி போட்டு அடுப்பை சிம் -இல் வைக்கவும்.
10 நிமிடங்களில் தண்ணீர் வற்றி கிழங்கு வெந்து விடும். (அடிக்கடி கிழங்கை கரண்டியால் கிண்டும் போது கிழங்கு உடைந்து விடும் .)
அதை எடுத்து அப்படியே பரிமாறலாம் . சாம்பார் ,ரசம் ,தயிர் என அனைத்துக்கும் ஏற்ற சைடு டிஷ் இது.சமைத்து பார்த்து ருசியை உணருங்கள் .
மிகவும் சுலபமான செய்முறை கொண்ட இந்த சுலபமான உருளை கிழங்கு வறுவல் (Easy Potato Fry) சில நிமிடங்களில் .!!!!
