கப்ஸா லேஹம்
Kabsa Leham
இந்த கப்ஸா லேஹம் (Kabsa Leham) அராபிய பாரம்பரிய உணவு ஆகும்.
இது செய்ய தேவையான பொருள்கள் சில வற்றில் இந்தியா வில் கிடைக்கும் பொருள்கள் கொண்டு மாற்றம் செய்ய பட்டு உள்ளது .
ஆனால் ருசியில் மாற்றம் இல்லை. வாய்ப்பு கிடைப்பவர்கள் நிச்சயம் ஒரு முறை இந்த கப்ஸா லேஹம் (Kabsa Leham) உணவை ருசித்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி -1/2 kg .
மட்டன் ( எலும்புடன் கூடியது ) -1/2 kg
குடை மிளகாய் -1
(குடை மிளகாய் பிடிக்காதவர்கள் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம் .எண்ணிக்கை -5 அல்லது 6 )
பூண்டு -6 பற்கள்
பெரிய வெங்காயம் -1
வெண்ணை -2 டேபிள் ஸ்பூன்
( தேவை பட்டவர்கள் -2 ஸ்பூன் எண்ணெய் உடன் சேர்த்து கொள்ளலாம் .)
ஏலக்காய் -4
தக்காளி (நன்கு பழுத்தது )-4
காரட்-2
வெள்ளை மிளகு தூள் -1/2 ஸ்பூன்
சீரக தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
சிக்கன் stock cube -1
(இதில் மட்டன் stock cube தான் பயன் படுத்த படுகிறது .அது கிடைக்காதவர்கள் chicken stock cube பயன் படுத்தலாம் .சூப்பர் மார்க்கெட் கடைகளில் கிடைக்கிறது )
எழுமிச்சை பழம் -1
(இதற்கு பதில் அங்கு dried லெமன் பயன் படுத்த படுகிறது )
குங்கும பூ -ஒரு சிட்டிகை
(கிடைக்க பெறாதவர்கள் கேசரி பவுடர் பயன் படுத்தலாம் )
raisins -1/4 கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
மட்டன்-ய் நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு சேர்த்து தனியே வேக விடவும் .
பாசுமதி அரிசியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிய விடவும் .
தக்காளி பழங்களை மிக்ஸ்யில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
காரட் -ய் நறுக்கி மிக்ஸ்யில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, கசடு இல்லாமல் வெறும் ஜூஸ் மட்டும் எடுத்து வைக்கவும் .
அடுப்பில் cooker வைத்து காய்ந்ததும் அதில் வெண்ணையை போட்டு உருக்கி அதில் ஏலக்காய் போட்டு பொரிய விடவும் .
அதனுடன் நறுக்கிய பூண்டு பற்களை போட்டு வதக்கவும் .
அதில் ,வெங்காயம் மற்றும் மிளகாய் இரண்டையும் சேர்த்து அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்-இல் வைத்து குறைந்தது 5 நிமிடங்களாவது வதக்க வேண்டும் .
பின் அதில் மட்டன் வேக வைத்த நீரை மட்டும் தனியே எடுத்து ஊற்றி .அதில் மிளகு தூள் ,கரம் மசாலா தூள் ,சீரக தூள் உப்பு இவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
அதில் சிறிது தண்ணீர் விட்டு சிக்கன் stock cube -ய் கரைத்து அதையும் சேர்த்து கொதிக்க விடவும் .அதில் கழுவிய அரிசியையும் சேர்த்து நன்றாக கிளறி கடைசியில் கேசரி பவுடர் மற்றும் ,எழுமிச்சை சாறு சேர்த்து விடவும் .
பாசுமதி அரிசிக்கு 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் வீதம் தண்ணீர் ஊற்ற வேண்டும் .(அதில் கரட் ஜூஸ் ,தக்காளி சாறு ,மட்டன் வெந்த தண்ணீர் இவற்றை எல்லாம் கணக்கில் கொள்வது அவசியம் .
cooker -ய் மூடி 2 விசில் வந்ததும் இறக்கி அதில் raisins தூவி சுட ,சுட பரிமாறலாம் .
(இதற்கு என்று பிரத்தியேகமான முறையில் மட்டன் sauce தயாரிக்க படுகிறது )