உருளை கிழங்கு குழம்பு (Potato Gravy)


உருளை கிழங்கு குழம்பு, Potato Gravy, கிழங்கு குழம்பு


 உருளை கிழங்கு குழம்பு 


வீட்டுக்கு திடீர் உறவினர் வருகை. என்ன குழம்பு செய்வது என்ற குழப்பம் எல்லோர் மனத்திலும் வரும். ஒரு 10 நிமிடத்தில் செய்யும் குழம்பு இது. வேலையும் சுலபம். சுவையும் அதிகம் !!! Bachelor கூட எளிதில் சமைக்கலாம்.

தேவையான பொருட்கள் 


உருளை கிழங்கு -3 ( medium size )
தக்காளி -3 (நன்கு பழுத்தது )
பெரிய வெங்காயம் -1
இஞ்சி- 1 துண்டு 
பூண்டு -4 
(இல்லை எனில் இஞ்சி ,பூண்டு விழுது -1 ஸ்பூன்)
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
உப்பு, மஞ்சள் தூள் -சிறிது
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.

செய்முறை 

உருளை கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து , ஒரு கிழங்கை 4 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும் .
ஒரு குக்கர் ஒன்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் , மிக்ஸியில் பெரிய வெங்காயம் , இஞ்சி ,பூண்டு இவற்றை போட்டு நன்றாக அரைத்து அந்த கலவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
அதனுடன் கரம்மசாலா சேர்த்து வதக்கவும். (கரம்மசாலா இல்லை எனில் ,வெங்காயம் இஞ்சி பூண்டுடன் ஒரு துண்டு பட்டை , இரண்டு கிராம்பு சேர்த்து அரைத்து கொள்ளலாம் )

பச்சை வாசனை போனதும் அதில் மஞ்சள் , உப்பு சேர்த்து வதக்கி , அதில் நறுக்கிய உருளை துண்டுகளை போட்டு வதக்கவும் .

அதில் 3 தக்காளி பழங்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதையும் சேர்த்து வதக்கவும் . அதனுடன் , மிளகாய் தூள் சேர்த்து , சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு , பின்பு இறுதியாக அதில் ஒரு 1 /4 மூடி தேங்காய் அரைத்து ஊற்றி ,இரண்டு அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
தேவை எனில் கொத்தமல்லி இலை தூவி கொள்ளலாம்.

எளிதான உருளை கிழக்கு குருமா அல்லது குழம்பு ரெடி.
இது, சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற குழம்பு . செய்வதும் மிக சுலபம்.

குறிப்பு :

உருளை கிழங்கு பெரிய துண்டுகளாக இருப்பது கூடுதல் சுவை தரும். 
Previous
Next Post »